ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம்
றெஜியோ எமிலியா, இத்தாலி.

ஆலயத்திற்கு வருவதற்குரிய பொதுவான விதிமுறைகள்

 
அனைத்து இன மக்களும் எந்தவிதமான  இன மத மொழி வேறுபாடுமின்றி ஆலயத்துக்கு வருகை தரலாம்.

இந்து /சைவ மதத்தவர்கள்   ஆலயம் செல்லும் போதுபின்பற்ற வேண்டியவை 

அசைவ உணவு  உண்ட பின்னர் ஆலயத்துக்கு செல்வதில்லை.

கோவிலுக்குள் குளித்து தூய ஆடை அணிந்து சுத்தமாக செல்லுவார்கள். 

 பிறப்பு, இறப்பு, தீட்டுக்கள்  மற்றும் மாதவிடாய் காலங்களில்   கோயிலுக்குள் செல்லமாட்டார்கள். 

வெளியில் இருந்து உணவுப்பொருட்களை உட்கொண்டு வர அனுமதிக்கப்படமாட்டார்கள்,  அத்துடன் திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்

காலணிகளுடன் ஆலயத்துக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். 

கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது

 நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ இடையுறு செய்யக் கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே தொலைபேசி  பேசுதல்)

கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது

ஆலயத்தினுள் மதுபோதையில் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் அத்துடன் ஆலயத்துக்குள் மது புகை பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். 

கவர்ச்சியான ஆடைகள், அரைக்காற்சட்டை  போண்ற ஆடைகளுடன் அல்லது தலையில் தொப்பி அணிந்துகொண்டு ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். ( கலாச்சார உடைகள் அணிந்து வருவது வரவேற்கத்தக்கது )

எங்களின் செல்ல பிராணிகள் அனுமதிக்க படமாட்டார்கள்.

'கோயில்களில் விதிகளை மதிப்போம். இறையருளைப் பெற்று இன்புறுவோம்!'






© 2025 Hindu Alayam - All rights reserved.