ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம்
றெஜியோ எமிலியா, இத்தாலி.

நாங்கள் யார்

நாங்ள் யார்?

இந்து மதமானது தன்னுள் சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்யம், சௌரவம், சாக்தம் எனும் ஆறு பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.ஆறுவகை சமயங்களில் ஒன்றான சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயமாகும். அதாவது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயம் சைவ சமயம் ஆகும்.  


 சிவன் என்றால் இறைவன்,  தலைவன் என பல பெயர்கள் உண்டு. சிவன்  ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் ஆகும். 


சிந்துவெளி நாகரிக காலத்திலேயே    சைவசமயமானது தோன்றியது. அதன் வரலாறுகளை  வேதங்கள்,  ஆகமங்கள் உபநிடதங்கள் புராணங்கள் போன்ற பல்வேறு நூல்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.  இது பதி,  பசு,  பாசம் என்னும் முப்பொருள்களின் சேர்க்கையால் ஆனது .  


 இதனால் சைவம் என்றால் சிவன், சிவன் என்றால் உயிரின் தத்துவம் என்பர் தமிழர். மொழியே சமயமாகவும் சமயமே வாழ்வாகவும் உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரே நெறி சைவம். 
இந்த சைவ சன்மார்க்க நெறியினை தழுவி புலம் பெயர் இலங்கை தமிழர்களாகிய நாங்கள் எம் மூலம் சைவ சன்மார்க்க நெறியினை உலகறியச் செய்யும் நோக்குடன் இத்தாலி வாழ் தமிழ் சைவர்கள் மூலம் Reggio Emilia, Italy என்னும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயமே இந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயமாகும் .

தமிழையும் தமிழர்களையும் சைவ நெறிகொண்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பாரிய பொறுப்புடன் தொடர்ந்து வரும் ஆலய நிர்வாக சபையினர் செயற்படுவார்







 


© 2024 Hindu Alayam - All rights reserved.