நாம் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்?
நாம் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்?
கோயில் என்பது வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல; அது, ஆன்ம பலத்தை தரும் இடம்.கோயிலுக்கு செல்வது என்பது ஒரு மரபு, ஒரு கலாச்சாரம், இந்த தொன்று தொட்ட பழக்கம் இந்து சைவர்களிடம் அதிகமாக இருப்பதன் காரணம், கோவிலுக்கு செல்வதால் கடவுளின் அருளும் ஆசியும் கிடைக்கின்றது. அதனோடு சேர்ந்து அமைதியான மனநிலையும், மனத்தெளிவும் ஒருவருக்கு கிடைக்கின்றது.
கோயில் என்பது நல்லதிர்வுகள் நிரம்பியது. காந்த சக்தி அதிகம் இருக்கும் இடம் கோயில். குறிப்பாக ஒரு மைய இடத்தில் கோயிலின் மூலவர் இருப்பார். மூலவர் இருக்கும் இடத்தை கர்பகிரஹம் அல்லது மூலஸ்தானம் என்கிறோம். இந்த இடத்தில் உலகின் தீவிரமான காந்த அலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
காலணிகளை வெளியே விட்டு செல்கிறோம்.
கடவுள் மீது இருக்கும் பக்தி மரியாதை காரணமாக நம் காலணிகளை வெளியே விட்டு செல்கிறோம். இதன் பின்னிருக்கும் அறிவியல் காரணம் யாதெனில், இத்தனை நல்லதிர்வுகள் நிரம்பிய இடத்தில் நம் புறகால்கள் படுகிற போது, அந்த அதிர்வுகள் நம் பாதத்தின் வழியே கடந்து சென்று உடலில் பரவ ஏதுவாக இருக்கும் என்பதால் தான். அத்துடன் ஆலயத்துக்குள் புனிதம் மற்றும் சுகாதாரத்தை பேணுவதும் முக்கிய நோக்கமாகும்.
கோயில் மணி
கோயில் மணி ஒலிக்கிற போது எழும் ஓசை விநாடிகளுக்கு எதிரொலிக்கும். அந்த எதிரொலி நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களையும், மற்றும் கேட்கும், பார்க்கும், தொடுகை ஆகிய ஐம்புலனில் மூன்று புலன்களையும் தூண்டுவதாக சொல்லப்படுகிறது.
கற்பூரம்
அடுத்து கற்பூரம் ஏற்றுவதன் பின்னிருக்கும் அறிவியல் காரணம் யாதெனில், இருளிலிருந்து மென்மையாக எழுகிற சிறு ஒளி கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. எனவே கர்ப குடி எப்போதும் குறைவான வெளிச்சத்துடன் இருக்கும் ஆனால் அங்கே ஏற்றப்படும் கற்பூர ஆரத்தி நம் மனதிற்கு தெய்வ ஒளியை தருவதோடு, கண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயப்பதாக இருக்கிறது. அத்தோடு கற்பூர ஆரத்தி சூட்டை நம் கைகளால் தொட்டு கண்களிலும் தலையிலும் வைக்கும் பொழுது தொடுகை உணர்வு தூண்டப்படுகிறது
உலகிலேயே நம் மரபில் தான், அறிவியலும் ஆன்மீகமும் இசைந்திருப்பதையும், அதை நம் அறிவார்ந்த ஆன்மீக மூத்தோர் வழக்கப்படுத்தியிருக்கும் ஆச்சரியத்தையும் காண முடியும் அத்ததுடன் நிறைய சக்திகளை பெறுவதற்கே நாம் ஆலயம் சென்று வருவது வழக்கமாகக் கொண்டுள்ளோம்
நன்றி வணக்கம்.
ஆக்கம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ . சி . சிவசங்கர குருக்கள் ஜே பி .