சைவ சமய வழிபாடு
சைவ சமய வழிபாடு
சைவ சமயத்தில் சிவ ஆலய வழிபாடு என்பது சமய ஒழுக்கத்துக்கு நிறைவு தருகிற ஓர் அங்கம். திருக்கோயிலில் உள்ள உருவத் திருமேனிகளை திருவேடத்தையும் சிவன் எனவே தெளியக் கண்டு தொழுதல் வேண்டும்.
இக்காரணம் பற்றியே, “அடியார் இருக்கும் அருளைப் புரியாய்' என்ற வேண்டு.கோளும், கோயில் இல்லா ஊரில் குடியிருக்கலாகது”என்ற வழக்கும் எழுந்தன. கோயிலில் வழிபாடு சைவரயுள்ளோர் அனைவரும் நாள்தோறும் சிவாலயம் சென்று சிவ வழிபாடு செய்யும் கடப்பாடு உடையவர். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அவனை மனத்தினாலே மட்டும் வழிபாடு செய்வது எல்லோருக்கும் இயல் வதன்று, இதனாலேயே வழிபாட்டில் ஆலயத்திற்க்கு சிறப்பான இடம் அமைகிறது.
ஆலயம், மக்கள் அனைவருடைய வழிப்பாட்டிற்கும் என்று அமைந்த தனி இடம், பசுவினிடம் எந்த இடத்தில் பால் தோன்றுகின்றது என்று சொல்ல முடியாவிட்டாலும், அது மடிவழியகாச் சுரப்பது போல, எங்கும் வியாபித்திருக்கும் இறைவன், சிவலிங்கத் திருமேனி மூலமாகத் தோன்றி, ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்றார்.
மார்க்கண்டேயர்க்கும் கண்ணப்பருக்கும் அருள் புரிந்த வரலாறுகள் சிறந்த எடுத்துக் காட்டாகும்,ஆதலால், சிவலிங்க வழிபாடும் திருக்கோயில் வழிபாடும் மிக்க அவசியமாகின்றன. திருக்கோயில் வழிபாடு செய்யும்போது, பொருள் தெரிந்து வழிபடுவது சிறப்பு. திருக்கோயிலில் பல தெய்வ வடிவங்கள் அமைப்புக்கள் இருந்தபோதிலும், அவற்றுள் ஒன்றேனும் பொருளற்றதாக இல்லை ; யாவும் தத்துவ அர்த்தங்களை அடக்கியுள்ளன. சிலவற்றைக் குறிப்பிட்டுச்சொல்வோம். சைவனுக்குத் திருவீதிகள் யாவுமே தெய்விகம் பொருந்தியவை. உள்ளே இருப்பது சூஸ்ம லிங்கம், கோபுரம் ஸ்தூல லிங்கம், நெடுந்தொலைவில் புறத்தேயிருந்து பார்த்தாலே தெரியும்படியாக அமைக்கப்பட்டு இருப்பது கோபுரம். எந்த நேரமும் தெய்வம் மனத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அக்காலத்தில் கோயில் கூடத் தொலைவிலிருந்து கண்டு வணங்குபவர்களுக்கு, கோபுரமானது பெரிய வடிவமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் அனுட்டானம் முடித்துக் கோபுர தரிசனம் செய்த பிறகே இரவு உண்ணும் நியமம் உள்ளாவர்கள் இப்போதும் உள்ளனர். மழைக் காலத்தில் வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்து, கோபுரங்கள் மறைக்கப்பட்டுக் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தால், அன்றிரவு உணவு கொள்வதில்லை ; மறுநாள் பொழுது, புலர்ந்து கோபுர தரிசனம் ஆனபிறகு தான் உண்பார்கள்.
கோபுரத்தைத் தரிசித்து உள் நுழைக்கதவுடன் கொடிமரமும் காணப்படும். கொடிமரத்தில் இடபம் பொறித்த அசைவ வழிபாடு கொடியையும் கட்டிய தருப்பைக் கயிற்றையும் காணலாம். கொடிமரம் சிவம், கொடி. ஆன்மா, தருப்பைக் கயிறு பாசம் என்பது ஒரு கருத்து. கொடிமரத்தைக் கடந்தால் பலீபீடமும், நந்தியும், அதற்கப்பால் கருவறையினுள்ளே சிவலிங்கமும் காணப்படும். சிவலிங்கம் பரம்பொருள் ; சிவலிங்கத்தை நோக்கியிருக்கின்ற நந்தியே ஆன்மா; பலிபீடமே நாம் பலி கொடுக்க வேண்டிய மனம் அல்லது ஆணவமாகிய பாசம். பலிபீடத்திற்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் அமைந்திருக்கும் நந்தியானது பாசத்தை விட்ட ஆன்மா, இறைவனுடைய அருள் ஒளியிலே கலந்து சிவமயம் என்ற நிலையைக் காட்டுகிறது. ஆலயத்துள் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் ஆன்மாக்கள் வழிபாட்டுக்காக ஏற்பட்ட பரார்த்த லிங்கம் என்பர். சிவபெருமான் அருவமாயும் உருவமாயும் இருந்து ஆன்மாக்களுக்கு அருளுகின்றார்.
அருவத் திருமேனியை அவன்னருள் பெற்ற ஞானிகளே அருட்கண்ணால் அகத்தே காண்பர். உற்சவம் கொண்டு வருகின்ற நடராசர், கணேசர், முருகர் முதலான மூர்த்திகள் உருவத் திருமேனிகள். சிவலிங்கமானது, அருவமும் அல்லாமல் உருவமும் அல்லாமல் உள்ள ஒரு மூர்த்தம், சிவாலயங்கள் பெரும்பான்மையானவை கிழக்கு நோக்கி இருக்கும். சில மட்டும் மேற்கு நோக்கிய சந்நிதிகள்; இவை ஞானம் அருள்பவை என்ற கருத்து உண்டு.
சிவபெருமானின் அருட்சக்தியே அவரின் வேறல்லர், விநாயகர் ஓம் ஏன்ற பிரணவ ரூப வடிவினர். ஆதலால், அவரை முதலாவதாக வணங்க வேண்டும். அவரை வழிபட்ட் பின்னர் சிவலிங்கப் பெருமானை வழிபட வேண்டும். பூசை காலங்களில் சென்று கற்பூரதீப ஆராதனை நடைபெறும்போது வழிபடுவது சிறப்பு. வழிபாட்டுக்குரிய மலர், பழம், கற்பூரம் முதலியன சேர்ப்பித்து வழிபடுதல் அவசியம்.' வழிபடும்போது அவரவர் பெருமானை அருட்பாசுரங்களால் துதித்துத் தம் குறைகளை விண்ணப்பித்தல் தக்கது. சிவாலய வழிபாட்டில், பூசைகாலத்தின்போது சிவசந்நிதியில் பஞ்சபுராணம் பாடுவது மரபு. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்திலும் ஒவ்வொரு பாடல் பாடுவது பஞ்ச புராணம் எனப்படும். பதிகம் பெற்ற தலைமையின் -தலப்பதிகம் இயன்ற அளவு ஓதுதல் வேண்டும்.
ஆலயம் சென்று வழிபடுவது பற்றிச் சில கருத்துக்களை அறிவது பயனுடையது. உண்மையாக ஆண்டவனுடைய சிவலிங்க வடிவத்தையோ வேறு உருவத் திருமேனியையோ உள்ளன்போடு வழிபட வேண்டும்.
ஆக்கம்
சரண்ஜா மயூரதன்.
Cadel bosco di sopra,
Reggio Emilia. Italia.